fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஈஸ்டர் ஆணைக்குழு அதிகாரிகள் கர்தினாலின் கருத்துக்களை கேட்டே நியமிக்கப்பட்டனர் : சட்டத்தரணி ஹரிகுப்த

ITN News Editor
By ITN News Editor மார்ச் 16, 2021 14:13

ஈஸ்டர் ஆணைக்குழு அதிகாரிகள் கர்தினாலின் கருத்துக்களை கேட்டே நியமிக்கப்பட்டனர் : சட்டத்தரணி ஹரிகுப்த

பாதிக்கப்பட்டவர்களின் கருத்துக்களை பெற்று கொண்டே நியமிக்கப்பட்டதாக ஜனாதிபதி சட்டப்பணிப்பாளர் நாயகம் சட்டதரணி ஹரிகுப்த ரோஹணதீர தெரிவித்தார். சுயாதீன தொலைக்காட்சியின் ஹத்தெவனிபெய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் அதனை குறிப்பிட்டார். நேற்றைய தினம் பேராயர் அதி வணக்கத்துக்குரிய கருதினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்த கருத்து தொடர்பிலும் இவர் தெளிவுப்படுத்தினார்.

பேராயர் அதி வணக்கத்துக்குரிய கருதினால் மெல்கம் ரஞ்சித் :

“இந்தக் குண்டுத்தாக்குதலின் பின்னணியில் யார் இருந்தார்கள் என்பது தொடர்பாகவோ அனுசரணை வழங்கியவர்கள் நிதி வழங்கியவர்கள் இதனை ஏற்பாடு செய்தவர்கள் பற்றியோ எதுவும் குறிப்பிடப்படவில்லை. சில கருத்துக்கள் மட்டுமே கூறப்பட்டுள்ளன. ஆணைக்குழு அறிக்கை மற்றும் அரச புலனாய்வுத் துறை, குற்றப்புலனாய்வுத் துறை, ஆகியவற்றினாலோ எமக்கு இதற்கான பதில் கிடைக்கவில்லை. ஆணைக்குழு இதனை விட கூடுதலான விடயங்களை கண்டறியும் என நாம் எதிர்பார்த்திருந்தோம். ஆனால் அவ்வாறு இடம்பெறவில்லை. இது பூர்த்தியடையாத அறிக்கையாகவே நாம் இதனை கருதுகின்றோம். அடிப்படை விடயங்கள் ஓரிரண்டு இருந்த போதிலும், இந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக திருப்தியடைய முடியாது.”

ஜனாதிபதி சட்டப்பணிப்பாளர் நாயகம் சட்டதரணி ஹரிகுப்த ரோஹணதீர :

அந்த மக்களுக்காக அவர் அன்றில் இருந்து முன் நின்கின்றார். அம்மக்களின் தலைவராக அவரின் எண்ணம் எமக்கு புரிகின்றது. இந்த உறுப்பினர்களை நியமிக்கும் போதும் அதில் உள்ள விடயங்களை தீர்மானிக்கும் போதும் கர்தினாலிடம் கேட்டு அவருடைய கோரிக்கைக்கு அமையவே உறுப்பினர்களை முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நியமித்தார். எனவே அந்த முழுமையான காலப்பகுதியில் கர்தினால் அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தி ஜனாதிபதி சட்டதரணி ஒருவர் உள்ளடங்களாக சட்டதரணிகள் ஆஜராகியிருந்தனர். கர்தினாலின் கோரிக்கைக்கு அமைய இந்த ஆணைக்குழு அமைக்கப்பட்டமையினால் அவரின் பிரதிநிதிகளாக இந்த சட்டதரணிகளை இவ்விடயத்தில் அனுமதிக்குமாறு ஜனாதிபதி தெரிவித்திருந்தார். புதிய ஜனாதிபதி தெரிவானதன் பின்னர் இவ்வாணைக்குழுவின் உறுப்பினர்களை நீக்கவும் புதிய உறுப்பினர்களை நியமிக்கவோ அதிகாரம் உண்டு. ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள விடயதானங்களில் மாற்றங்களையும் ஏற்படுத்த முடியும். எனவே இது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் கர்தினாலிடம் கலந்துரையாடினார். அதாவது இதில் மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டுமா என கோரினார். எனினும் அதில் அவ்வாறான மாற்றங்களை செய்ய தேவையில்லையென கர்தினால் தெரிவித்தார். மைத்ரிபால சிறிசேன அமைத்த அந்த ஆணைக்குழுவின் செயற்பாடுகள் அவ்வாறே தொடரட்டும் என கர்தினால் தெரிவித்தார். அதற்கமைவாகவே அதன் இறுதி அறிக்கை பெப்ரவரி முதலாம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது. “

ITN News Editor
By ITN News Editor மார்ச் 16, 2021 14:13

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க