fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நாளை முதல் மேல் மாகாணத்தில் 5ம், 11ம்; மற்றும் 13ம் தர வகுப்புக்களின் கதவுகள் திறப்பு..

ITN News Editor
By ITN News Editor மார்ச் 14, 2021 15:00

நாளை முதல் மேல் மாகாணத்தில் 5ம், 11ம்; மற்றும் 13ம்  தர வகுப்புக்களின் கதவுகள் திறப்பு..

மேல் மாகாணத்தில் 5 ஆம் பதினொராம் மற்றும் பதின்மூன்றாம் தரங்களுக்கான பாடசாலை கல்வி நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பமாகவுள்ளன. மேல் மாகாணத்தில் சகல வகுப்புக்களுக்குமான கல்வி நடவடிக்கை அடுத்த மாதம் 19 ஆந் திகதியே ஆரம்பமாகவுள்ளது.

மேல் மாகாணத்தை தவிர நாட்டின் சகல பகுதிகளிலும் அரச மற்றும் அரச அங்கீகாரத்தின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் கடந்த மாதம் 25 ஆந் திகதி நிறைவடைந்தது. இரண்டாந் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பமாகின்றன. இதற்கிணைவாக மேல் மாகாணத்தில் ஐந்தாம் பதினொராம் மற்றும் பதின்மூன்றாந் தரங்களுக்கான கல்வி நடவடிக்கைகளை நாளை முதல் ஆரம்பிக்க கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.

பாடசாலை ஆரம்பமாவதை முன்னிட்டு வகுப்பறைகளை கிருமி தொற்று நீக்கம் செய்தல் உள்ளிட்ட சுகாதார நடவடிக்கைகள் இடம்பெற்றன.

இதேவேளை புத்தசாசன விவகார அமைச்சின் கீழ் காணப்படும் அறநெறி பாடசாலைகளின் இறுதிப் பரீட்சை நேற்றைய தினம் வெற்றிகரமாக இடம்பெற்றதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2019 ஆம் ஆண்டிற்கான அறநெறி பாடசாலை இறுதிப்பரீட்சையே இவ்வாறு இடம்பெற்றது. கொரோனா பரவல் காரணமாக இப்பரீட்சை ஒத்திவைக்கப்பட்டது.

இதேவேளை, ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் உயர்தரப் பரீட்சையினை ஓகஸ்ட் நடத்தாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கல்வி நடவடிக்கைகள் சரியான முறையில் இடம்பெறாமை மற்றும் பாடப்பரப்புக்கள் முழுமைப்படுத்தப்படாமையே இதற்கு காரணமாகும். குறித்த இரு பரீட்சைகளையும் எதிர்காலத்தில் நடத்துவதற்கு மாகாண கல்வி அமைச்சர்களோடு இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது தீர்மானிக்கப்பட்டது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 14, 2021 15:00

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க