தேசிய கரப்பந்து வெற்றிக்கிண்ண போட்டியில் இராணுவ மகளிர் அணி வெற்றிப் பெற்றது.
விமானப்படை மகளிர் கரப்பந்து அணி பல ஆண்டுகளாக தக்கவைத்திருந்த மஞ்சி தேசிய கரப்பந்து வெற்றிக்கிண்ணத்தை இராணுவ மகளிர் கரப்பந்தாட்ட அணி வென்றிக்கொண்டது.
இம்முறை இராணுவ மகளிர் கரப்பந்து அணி முதல் முறையாக சாம்பியன்ஷிப்பை வென்றுள்ளது. மஹரகம இளைஞர் சேவைகள் மன்ற மைதானத்தில் இப்போட்டிகள் நடைபெற்றன.
இராணுவ மகளிர் கரப்பந்தாட்ட அணி 3 ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய கரப்பந்து சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இராணுவ மகளிர் அணி வலிமைமிக்க விமானப்படை அணியை 3-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து இந்த முறை வெற்றிக்கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.
இதற்கிடையில், சூப்பர் லீக் கரப்பந்து தொடரில் ஆண்கள் பட்டத்தை இலங்கை மின்சார சபை அணி வென்றது. இறுதிப்போட்டியில் அவர்கள் பிடுலின்க் கிரியுல்ல அணியை 3-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து வெற்றிப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.