தென்னாபிரிக்க கருப்புச்சந்தையில் போலி கொரோனா தடுப்பூசிகள் விற்பனை செய்யப்படுவதாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் கவலை வெளியிட்டுள்ளார். அந்நாட்டில் போலி கொரோனா தடுப்பூசிகள் இரகசியமாக விற்பனை செய்யப்படுவது தொடர்பில் பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த விடயம் மிகவும் கவலையளிப்பதாக தென்னாபிரிக்க சுகாதார அமைச்சர் ஸ்வேலி கைஸ் அந்நாட்டு பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து ஆராய்வதற்கென சிறப்புக்குழுவொன்ற அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை தென்னாபிரிக்காவில் இதுவரை 15 லட்சத்து 26 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 53 ஆயிரத்து 179 மரணங்களும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.