மியன்மார் நிர்வாகத்தை மீண்டும் அவுன்சான்சூச்சிக்கு வழங்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் ஸ்தாபன பாதுகாப்புச் சபை யோசனையொன்றை நிறைவேற்றியுள்ளது.
ஐக்கிய நாடுகள் ஸ்தாபன பாதுகாப்பு சபையின் விசேட அமர்வில் உரையாற்றிய அதன் தலைவர் இதனை தெரிவித்துள்ளார். இதற்கு பூரண தலையீட்டை மேற்கொள்ள பாதுகாப்புச் சபை தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மியன்மார் இராணுவம் கைது செய்துள்ள அரசியல் செயற்பாட்;டாளர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறும் ஜனநாயகத்துக்கு எதிரான செயற்பாடுகளை உடன் நிறுத்த வேண்டுமெனவும் பாதுகாப்புச் சபை மியன்;மார் இராணுவ தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வரும் வன்முறைகள் காரணமாக இதுவரை உயிரிழந்த ஜனநாயக செயல்பாட்டாளர்களின் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளது. ஆயிரத்து 800 இற்கும் கூடுதலானோர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்படுகின்றது.இவர்களில் தொழில் சார்ந்தவர்கள், இளைஞர் யுவதிகள் மனித உரிமை செயல்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களும் அடங்குகின்றனர். கடந்த பெப்ரவரி முதலாம் திகதி ஜனநாயக ரீதியில் தெரிவாகிய மியன்மார் அரசாங்கம் இராணுவ சூழ்ச்சியினால் கவிழ்கப்பட்டதையடுத்து கைது செய்யப்பட்ட மியன்மார் தலைவி உள்ளிட்ட அரசியல் செயல்பாட்டாளர்கள் தொடர்ந்தும் இராணுவத்தின் பிடியிலுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.