எதிர்வரும் மூன்று வாரங்களுக்கு நாட்டிலுள்ள அனைத்து தேசிய பல்கலைக்கழகங்களையும் மீள திறக்க நடவடிக்கை
Related Articles
எதிர்வரும் மூன்று வாரங்களுக்கு நாட்டிலுள்ள அனைத்து தேசிய பல்கலைக்கழகங்களையும் மீள திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பல்கலைக்கழகங்களை மீள திறப்பது தொடர்பில் சுகாதார அதிகாரிகளிடம் அனுமதி கோரியுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார். பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசியை ஏப்ரல் மாதம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.