பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானுக்கும் தடுப்பூசிகளை இலவசமாக வழங்க இந்தியா முன்வந்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவிஷீல்ட, சுமார் 40 மில்லியன் டோஸ் தடுப்பு மருந்து பாகிஸ்தானுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது. தடுப்பூசிகள் மற்றும் நோய்த்தடுப்புக்கான உலகளாவிய கூட்டணி மூலம் தடுப்பூசி பாகிஸ்தானுக்கு கிடைக்கப்பெறும். அந்நாட்டு மொத்த மக்கள் தொகையில், சுமார் 20 சதவீத மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இந்தியாவிடமிருந்து தடுப்பூசி கிடைக்;கப்பெறவுள்ளதாக பாகிஸ்தான தேசிய சுகாதார சேவை செயலாளர் அமீர் அஷ்ரப் கவாஜா உறுதிப்படுத்தியுள்ளார். இந்தியாவுக்கு எதிரான மனநிலையில் பாகிஸ்தான் காணப்பட்டபோதும், கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த இந்தியா உதவ முன்வந்துள்ளமை பல்வேறு தரப்பினாலும் பாராட்டப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாகிஸ்தானுக்கும் தடுப்பூசிகளை இலவசமாக வழங்க இந்தியா முன்வந்துள்ளது.
படிக்க 1 நிமிடங்கள்