மனிதகுலத்தின் அமைதியை குறிக்கும் வகையில் சிவராத்திரி அமைந்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தனது வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார். மனிதர்களிடையே நல்லிணக்கத்திற்கும், சக வாழ்வுக்கும் வழிவகுக்கும் தினமே சிவராத்திரி தினமாகும். நம்பிக்கையின் ஒளி அனைவரிடத்திலும் பிரகாசிக்க அக மற்றும் புற இருளை விரட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் உலகெங்கிலுமுள்ள அனைத்து இந்துக்களுக்கும் அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கு வழி வகுக்கும் அர்த்தமுள்ள தினமாக சிவராத்திரி தினமாக அமையட்டுமென எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவரின் சிவராத்திரி வாழ்த்துச் செய்தி
படிக்க 0 நிமிடங்கள்