மகா சிவராத்திரி எனும் புனிதமான விரதத்தை உலகெங்கிலுமுள்ள இந்துக்களுடன் இணைந்து, பக்திமிக்க சுப நந்நாளை அனுஸ்டிக்கும் இலங்கை வாழ் இந்துக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாக பிரதமர் குறிப்பிட்டார். இலங்கையில் ஏனைய சமூகங்களுடன் ஐக்கியத்துடன் வாழும் நீண்ட பாரம்பரியத்தை கொண்ட இந்துக்கள் சிவராத்திரி எனும் புனித விரதத்தை ஆன்மீக உணர்வுடன் அனுஸ்டிக்கின்றனர். நல்லிணக்கம் மற்றும் புரிந்துணர்வினூடாக ஐக்கியத்திற்கான அவர்களின் தேடல், மேலும் பலம் பெற இறையருள் துணைபுரியட்டும். மகா சிவராத்திரி விரதத்தை அனுஸ்டிப்பதால் ஆன்மீக விமோசனம் கிடைக்குமென்பது இந்துக்களின் உயர்ந்த நம்பிக்கையாகும். தியானமே மனிதனை ஆன்மீகு ரீதியில் பக்குவப்படுத்துமெனவும், இருள் நீங்கி அறிவுஞானம் தலைத்தோங்க வேண்டுமென்ற பிரார்த்தனையோடு, இந்துக்கள் சிவராத்திரி தினத்திற்கு இரவு முழுவதும் கண்விழித்து, புண்ணிய கருமங்களில் ஈடுபடுகின்றனர்.
இதனூடாக மகோ உண்ணத விரதத்தை அனுஸ்டித்து, ஆன்மீக வாழ்வை வளப்படுத்துகின்றனர். இந்நாளில் இறையருளால், இந்துக்கள் நிச்சயம் ஆன்மீக பலம் பெறுவார்கள். வளமானதொரு எதிர்காலத்திற்கான தனது எதிர்பார்ப்புக்கள் அனைத்தும் நிறைவேற இலங்கை வாழ் மக்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.