ஓசோன் படலத்தை பாதுகாப்பதற்காக வன பசுமை தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை
Related Articles
ஓசோன் படலத்தை பாதுகாப்பதற்காக வன பசுமை தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் நடவடிக்கை சுற்றாடல் அமைச்சினால் முன்னெடுக்கப்படுகின்றது. சுற்றாடல் அமைச்சின் வளி வளம் முகாமைத்துவ மற்றும் ஓசோன் படல பாதுகாப்பு பிரிவு இதனை முன்னெடுக்கின்றது.
இதன்கீழ் நாட்டிலுள்ள தொழில்நுட்ப கல்லூரிகளுக்கு என குளிரூட்டி மற்றும் குளிர்சாதன கற்கைநெறியை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு சி.எப்.சி அற்ற புதிய உபகரணங்கள் தொகுதியை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மருதானை தொழில்நுட்ப கல்லூரிக்கு குறித்த உபகரணங்களை வழங்கும் நிகழ்வு அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் இடம்பெற்றது. எதிர்வரும் இரண்டு வருட காலப்பகுதிக்குள் சி.எப்.சி அற்ற 200 மில்லியன் ரூபா பெறுமதியான புதிய உபகரண தொகுதிகள் தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி கல்லூரிக்கு வழங்கப்படவுள்ளது.
“சுற்றாடலில் எங்கு பாதிப்பு ஏற்பட்டாலும் அது முழு உலகிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும். இலங்கையில் சுற்றாடல் பாதிப்பு ஏற்படுவதாக உலகுக்கு காட்டி தமது அமைப்புக்களுக்கு பணம் சேர்த்துக் கொள்ளும் நடவடிக்கையில் சிலர் ஈடுபடுகின்றனர். எந்தவொரு வகையிலும் சுற்றாடல் பாதிப்பை மேற்கொள்ளும் விடயத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லையென்பதை நான் பொறுப்புடன் கூறுகின்றேன். வழங்குவதற்கான நோக்கமும்; இல்லை. வேறு துறைகளில் வழங்கப்படுகின்ற அனுமதியால் நாம் இதற்கு பொறுப்பு கூற வேண்டியுள்ளது. அவற்றுக்கும் எமது பக்கத்திலிருந்தான தலையீடுகள் சரியான விதத்தில் மேற்கொள்ளப்படும். சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரிகளுக்கு தேவையான ஆலோசனைகளை நாம் வழங்கியுள்ளோம். தராதரம் பாராது சட்;டத்தை அமுல்படுத்துமாறு நாம் தெரிவித்துள்ளோம்.”