கறுப்பின ஜோர்ஜ் ப்ளொய்ட் கொலை வழக்கை விசாரிக்க ஜூரிக்கள் நியமனம்..
Related Articles
உலகில் மிகப்பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய அமெரிக்காவின் ஜோர்;ஜ் ப்ளொய்ட் என்ற கருப்பினத்தவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகளுக்கு நீதிபதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
12 பேர் கொண்ட நீதிபதிகள் குழாமுக்கு என முதல் 3 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதில் இரு ஆண்களும் ஒரு பெண்ணும் உள்ளடங்குகின்றார். டெரெக் ச்சோவின் என்ற பொலிஸ் அதிகாரியினால் ஜோர்ஜ் ப்ளொய்ட் கடந்த வருடம் மே மாதம் கொல்லப்பட்டார்.
ஜோர்ஜ் ப்ளொயட்டின் கழுத்தை குறித்த பொலிஸ் அதிகாரி தனது முழங்காலினால் நெரித்தமையினால் இச்சம்பவம் இடம்பெற்றது. இவ்விடயம் அமெரிக்காவிற்குள் பெரும் கலவரங்களை தோற்றுவித்தது. கருப்பினத்தவர்கள் உரிமைகளை கோரி இலட்சக்கணக்கானோர் வீதிகளில் இருந்து போராட்டங்களை முன்னெடுத்த்னர். கடந்த ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்பின் தோல்;விக்கு இந்த சம்பவமும் ஒரு காரணம் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.