கொவிட் 19 தொற்றிய 344 பேர் நேற்றைய தினமும் இனங்காணப்பட்டனர். நேற்று இனங்காணப்பட்ட 344 தொற்றாளர்களில் 10 பேர் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்கள் நேற்றைய தினமும் கூடுதலான தொற்றாளர்கள் கம்பஹா மாவட்டத்திலிருந்து இனங்காணப்பட்டதுடன் அவ் எண்ணிக்கை 65 ஆகும்.
கொழும்பு மாவட்டத்திலிருந்து 54 பேரும் காலி மாவட்டத்திலிருந்து 44 பேரும் இனங்காணப்பட்டதுடன் ஏனைய 168 தொற்றாளர்களும் நாட்டின் ஏனைய மாவட்டங்களிலிருந்து இனங்காணப்பட்டனர்.
இன்று காலை வரை மினுவாங்கொட மற்றும் பேலியகொட கொரோனா கொத்தணியின் மொத்த எண்ணிக்கை 82,269 ஆகும். இவர்களில் 81,083 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர். அதற்கமைய நாட்டில் இதுவரை பதிவாகிய மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 86,039 ஆகும். இவர்களில் 3,019 பேர் வைத்தியசாலைகளிலும் இடைத்தங்கல் சிகிச்சை நிலையங்களிலும் சிகிச்சை பெறுகின்றனர். 82,513 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.
“நாட்டில் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்படுவதில் குறைவு ஏற்பட்டுள்ளது. அத்துடன் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுகின்ற தொற்றாளர்களின் எண்ணிக்கையிலும் குறைவு ஏற்பட்டுள்ளது. திடீரென பீசீஆர் பரிசோதனைகளை மேற்கொண்டு இந்நிலையை மேலும் உறுதி செய்ய வேண்டும். தொற்றாளர்களின் எண்ணிக்கை இந்நாட்களில் அதிகரிக்க கூடுமென உலக சுகாதார தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் எமது நாட்டிலும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடிய நிலை ஏற்படலாம். இது குறித்து பொதுமக்களும் அதிகாரிகளும் கவனம் செலுத்தி செயற்பட வேண்டும்.”
கொரோனா தொற்றுக்கு இலக்காகிய 5 பேர் உயிரிழந்ததையடுத்து மரண எண்ணிக்;கை 507 ஆக அதிகரித்துள்ளது. முப்படையினரால் நிர்வகிக்கப்படுகின்ற 104 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 10,192 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் 7,194 பீசீஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.