சுகாதார ஊழியர்களை அழைத்துச் சென்ற சொகுசு பஸ் வண்டியொன்று களுத்துறை வஸ்;கடுவ பகுதியில் புகையிரதத்தில் மோதி விபத்துக்குள்ளாகியது.
களுத்துறை பகுதியில் ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சுற்றுலா பயணிகளின் பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக இவர்கள் வருகை தந்துள்ளனர். குறித்த ஹோட்டலை தாண்டிச் சென்ற நிலையில் மீண்டும் பஸ் வண்டியை திருப்துவதற்காக புகையிரத கடவைக்குள் பிரவேசித்த போதே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. இதன்போது பஸ் வண்டியில் 12 பேர் பயணித்துள்ளதுடன், சாரதி படுகாயமடைந்துள்ளார்.