fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அம்பாறை மாவட்ட சிறுபோக நெற்செய்கைக்கான விதைப்புப் பணிகள் எதிர்வரும் 20 ஆம் திகதி முதல்..

ITN News Editor
By ITN News Editor மார்ச் 4, 2021 12:46

அம்பாறை மாவட்ட சிறுபோக நெற்செய்கைக்கான விதைப்புப் பணிகள் எதிர்வரும் 20 ஆம் திகதி முதல்..

அம்பாறை மாவட்டத்தில் 2021ம் ஆண்டுக்கான சிறுபோக நெற்செய்கைக்கான விதைப்புப் பணிகளை எதிர்வரும் 20 ஆம் திகதியில் இருந்து ஏப்ரல் மாதம் 20ம் திகதிக்குள் நிறைவு செய்ய வேண்டுமென, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல். பண்டாரநாயக்கா தெரிவித்தார்.

அக்கரைப்பற்று பிரதேச கல்லோயா வலது கரை நீர்ப்பாசனப் பிரிவுக்குட்பட்ட பிரிவுகளில் 2021 க்கான சிறு போக நெற்செய்கைக்கான கூட்டம் செவ்வாய்க்கிழமை (02) அக்கரைப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

அம்பாறை மாவட்டத்தில் கல்லோயா நீர்ப் பாசண பிரிவில் இம்முறை 01 இலட்சத்தி 20 ஆயிரம் ஏக்கரிலும், அக்கரைப்பற்று வதிவிட திட்ட முகாமையாளர் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் 24 ஆயிரத்தி 10 ஏக்கரிலும் நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

சேனநாயக்கா சமுத்திரத்தில் 04 இலட்சத்தி 16 ஆயிரத்தி 800 ஏக்கர் அடி நீர் காணப்படுகின்றது. இதன் படி சிறுபோகத்திற்கான விதைப்புப் பணிகளை முன்னெடுக்க வேண்டும்.

நீரை வீண்விரையம் செய்யாது தேவைக்கேற்றவாறு பயன்படுத்தி எதிர்வரும் போகங்களில் நெற்செய்கை பண்ணுவதற்குரிய செயற்பாட்டினை முன்னெடுக்க வேண்டும்.

தீர்மாணிக்கப்பட்ட திகதிக்கு முன்னர் விதைப்புப் பணிகளை முன்னெடுக்க வேண்டாமெனவும், இங்கு நிறைவேற்றப்படும் தீர்மாணங்களை சகலரும் பின்பற்ற வேண்டும் இதனை மீறுபவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 4, 2021 12:46

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar179.39183.06
USA
Pound232.18239.41
UK
Euro197.73204.49
EU
Yen1.621.67
Japan
Yuan25.726.91
China
Dollar121.84126.92
Australia
CountryCurrencyRate
Dinar480.97
Dinar597.39
Riyal470.97
Riyal49.80
Riyal48.33
Dirham181.33