நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது 38 ஆர்ப்பாட்டக்காரர்கள் உயிரிழந்தனர். மியன்மார் வரலாற்றில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நாளாக நேற்;றைய தினத்தை குறிப்பிட முடியுமென உலக சுகாதார ஸ்த்தாபனம் அறிவித்துள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்காக பொலிசார் இரப்பர் உண்டைகளை பயன்படுத்தி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இராணுவ ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்து நியாயமான தேர்தல் ஒன்றின் மூலம் நாட்டை நிர்வகிக்க கூடிய நிர்வாகத்தை கோரி கடந்த பெப்ரவரி முதலாம் திகதி முதல் மியன்மாரில் தொடர் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன.
மியன்மார் ஆர்ப்பாட்டங்கள் வரலாற்றில் சூடுபிடித்த தினமாக நேற்று பதிவாகியது..
படிக்க 0 நிமிடங்கள்