கொரோனா சடலங்களை இரணைத்தீவில் புதைப்பதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்..
Related Articles
கொரோனா தொற்று காரணமாக உயிரிழக்கும் நபர்களின் சடலங்களை கிளிநொச்சி இரணைத்தீவு பகுதியில் புதைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு பிரதேச வாசிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இரணைத்தீவு பகுதியில் சடலங்களை புதைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். இரணைத்தீவில் 108 குடும்பங்களை சேர்ந்த 335 பேர் வரை வாழ்ந்து வரும் நிலையில் அவர்கள் மீன் பிடி நடவடிக்கைகளிலேயே ஈடுப்பட்டு வருகின்றனர். அங்குள்ள மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு தமது வாழ்வியலை முன்னெடுத்து வருகின்றனர். எனினும் இதுவரை இரணைத்தீவு பகுதியில் எந்தவொரு கொரோனா தொற்றாளரும் இனங்காணப்பட்டாத நிலையில் கொவிட் 19 தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை தாம் வாசிக்கும் பகுதியில் அக்கம் செய்வதற்கு எதிராக அங்குள்ளவர்கள் எதிரப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.