எதிர்வரும் 31ம் திகதி முதல் சில பிளாஸ்டிக் மற்றும் பொலிதீன்களின் பாவனையை தடை செய்ய சுற்றாடல் அமைச்சு தீர்மானித்துள்ளது. ஒரு தடவை மாத்தரம் பயன்படுத்தி பொலிதீன், பிளாஸ்டிக் போத்தல், மைக்ரோ 20க்கு குறைவான பொலிதீன், பெட் போத்தல், செம்போ பக்கற்றுக்கள் மற்றும் காற்று நிரப்பப்பட்ட விiளாயாட்டு பொருட்கள் என்பவற்றை தடைசெய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் மற்றும் பொலிதீன் பொருட்கள் சூழலுடன் இணைவதால் நாட்டில் அதிகளவான சூழல் மாசடைவு ஏற்படுவதுடன், நீர் மாசடைகின்றமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இவ்வாறான பிளாஸ்டிக் மற்றும் பொலிதீன் உற்பத்திகள் சில வற்றை எதிர்வரும் 31ம் திகதி முதல் தயாரிப்பதற்கு மற்றும் அதனை விநியோகிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக சூழலுக்கேற்ற பொருட்களை அறிமுகப்படுத்துவது தொடர்பில் சுற்றால் அமைச்சு பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடியுள்ளது. அதற்கமைய பிளாஸ்டிக் மற்றும் பொலிதீன் பாவனைக்கு பதிலாக மாற்றுப்பொருட்களை பயன்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.