கடந்த 24 மணித்தியாலத்தில் வாகன விபத்துக்களால் 12 பேர், உயிரிழந்துள்ளனர். அவர்களில் 8 பேர் நேற்று இடம்பெற்ற வாகன விபத்துக்களில் மரணித்துள்ளனர். ஏனைய நால்வர், இதற்கு முன்னர் இடம்பெற்ற விபத்துக்களில் காயமடைந்த நிலையில் சிகிச்சைப் பெற்று வந்தவர்களென பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பாதசாரிகள் நால்வர, முற்சக்கர வண்டிகளில் பயணித்த நால்வர் மற்றும் சைக்கிள் செலுத்துனர்கள் இருவர் உள்ளடங்குகின்றனர்.
நாட்டில் வீதி விபத்துக்கள் அதிகரித்துள்ள நிலையில், வீதி பாதுகாப்பு தொடர்பில் மோசமான நிலை ஏற்பட்டுள்ளது. வாகன சாரதிகள் மற்றும் பாதசாரிகளின் கவனமின்மையே வாகன விபத்துக்கள் அதிகரிக்க காரணமாகும். இதன் காரணமாக எதிர்காலத்தில் பாரிய வாகன போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளனர்.