fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஏற்றுமதி வலய கிராமங்கள் வேலைத்திட்டம் இன்று ஆரம்பம்

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 27, 2021 14:08

ஏற்றுமதி வலய கிராமங்கள் வேலைத்திட்டம் இன்று ஆரம்பமாகிறது. ஹம்பாந்தோட்டை கசாகல விகாரையில் இடம்பெறும் சமய நிகழ்வுகளையடுத்து தொடர்ந்து வேலைத்திட்டம், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஆரம்பமாகவுள்ளது. ஏற்றுமதி வலய கிராமங்கள் வேலைத்திட்டத்தின் ஊடாக ஒவ்வொரு கிராமத்திலும் குறைந்தபட்சம் 500 ஏக்கர் நிலப்பரப்பில் ஏற்றுமதி பயிர்களை பயிரிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

நாட்டின் பல பாகங்களிலும் ஒன்பது ஏற்றுமதி வலயங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜனாக்க வக்கும்புர தெரிவித்துள்ளார். தேசிய உற்பத்தியில் ஏற்றுமதித்துறையின் ஊடாக கிடைக்கப்பெறும் இரண்டு வீத பங்களிப்பை 2025ஆம் ஆண்டளவில் நான்கு சதவீதமாக உயர்த்தும் நோக்கில் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. அத்துடன், விவசாயிகளை ஊக்கப்படுத்தி, கரும்பு, சோளம், முந்திரிகை, மிளகு, கறுவா, வெற்றிலை உள்ளிட்ட பயிர்ச் செய்கைகளை அபிவிருத்தி செய்வதும் திட்டத்தின் நோக்கமாகும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்திற்கமைய இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 27, 2021 14:08

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar179.39183.06
USA
Pound232.18239.41
UK
Euro197.73204.49
EU
Yen1.621.67
Japan
Yuan25.726.91
China
Dollar121.84126.92
Australia
CountryCurrencyRate
Dinar480.97
Dinar597.39
Riyal470.97
Riyal49.80
Riyal48.33
Dirham181.33