fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நியூசிலாந்து தொடருக்கான பங்களாதேஷ் அணி வீரர்களுக்கு கொவிட் தடுப்பூசி..

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 23, 2021 12:51

பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் 3 ஒரு நாள் சர்வதேச போட்டிகள், 3 டுவண்டி டுவண்டி போட்கடிள் நடைப்பெறவுள்ளன. மார்ச் 20ம் திகதி முதல் ஏப்ரல் முதலாம் திகதி வரை தொடர் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் நியூசிலாந்து பயணமாகவுள்ள பங்களாதேஷ் அணி வீரர்கள் உள்ளிட்ட நிர்வாக குழுவினருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமீம் இக்பால், பங்களாதேஷ் அணியின் தலைமைப்பயிற்றுவிப்பாளர் ரஷல் டொமின்கோ உள்ளிட்டோருக்கு முதலாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதோடு, சௌம்யா சர்கார், இக்பால் மஹ்தியாஷன், மிராஸ், மொஹமட் நைன், தஸ்கின் அஹமட் ஆகியோரும் தடுப்பூசியை செலுத்தியுள்ளனர்.

அத்தோடு அணியின் ஏனைய வீரர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளாhக பங்களாதேஷ் கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது. நியூசிலாந்து பயணமாகவுள்ள பங்களாதேஷ் கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் பணிப்பாளர் ஜலால் யூனிஸூக்கும் கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 23, 2021 12:51

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க