இன்று நள்ளிரவு முதல், சாதாரண தரப்பரீட்சை நிறைவடையும் வரை பரீட்சாத்திகளுக்கான மேலதிக வகுப்புக்களை நடத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. கருத்தரங்குகள், செயலமர்வுகள், மாணவர்களுக்கான கலந்துரையாடல், மாதிரி வினாத்தாள்களை அச்சிடுதல், விநியோகித்தல், சுவரொட்டிகள், பதாதைகள் போன்றவற்றை பிரசுரிக்கும் செயற்பாடுகளுக்கும் தடைவிதிக்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. தடையுத்தரவை மீறி செயற்படும் நபர்கள் தொடர்பில் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்க முடியும். அல்லது 1911 என்ற துரித தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் வழங்க முடியுமெனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2020ம் ஆண்டு கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகளுக்கு இம்முறை விசேட வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளன. அதற்கமைய பரீட்சை அனுமதி அட்டையில் காணப்படும் குறைபாடுகளை றறற.னழநநெவள.டம எனும் இணையத்தள முகவரியில் பிரவேசித்து திருத்தங்களை மேற்கொள்ள முடியுமென பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார். பாடசாலை பரீட்சார்த்திகள் பாடசாலை அதிபர்கள் மூலமும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் தாமாகவே ஒரு வாரத்திற்குள் திருத்தங்களை மேற்;கொள்ள வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். சாதாரண தரப் பரீட்சை மார்ச் மாதம் முதலாம் திகதி முதல், 10 ம் திகதி வரை நாடளாவிய ரீதியிலுள்ள 4 ஆயிரத்து 500 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளது.