fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அவுஸ்திரேலியாவில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணிகள் நாளை முதல்

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 21, 2021 16:31

அவுஸ்திரேலியாவில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணிகள் நாளை முதல்

அவுஸ்திரேலியாவில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணிகள் நாளை முதல் இடம்பெறவுள்ளன. முதற்கட்டமாக மக்களிடையே தடுப்பூசி தொடர்பான அச்சத்தை நீக்கி நம்பிக்கையூட்டும் வகையில் இன்றைய தினம் பிரதமர் ஸ்கொட் மொரிசனுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டது. குறித்த நிகழ்வு அந்நாட்டு தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுப்பட்டுள்ளோர் எளிதில் கொரோனா தொற்றுக்கு ஆளாகக்கூடும் அதற்கமைய முதற்கட்டமாக கொரோனாவுக்கு எதிராக போராடுபவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டியது அவசியமென அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அவுஸ்திரேலியாவில் கொரோனா தடுப்பூசி ஏற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் இடம்பெற்று வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 21, 2021 16:31

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க