fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அரிசி விலையை அதிகரிக்க அனுமதியளிக்கப்போவதில்லை : அமைச்சர் பந்துள

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 20, 2021 13:33

அரிசி விலையை அதிகரிக்க இடமளிக்கப்போவதில்லையென அமைச்சர் கலாநிதி பந்துள குணவர்தன தெரிவித்துள்ளார். எதிர்வரும் 3 வருடங்களுக்கு நாடு மற்றும் சம்பா அரிசி போன்றவை ஒரு கிலோ 100 ரூபாவை விட அதிகரிக்க அனுமதி வழங்கப்படமாட்டாதென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பு நகரில் அரச வணிக கூட்டுதாபணத்தின் கிளையை திறந்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். விவசாயிகளுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்கும் விதத்தில் உத்தரவாத விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலா நாட்டரிசிக்கான நெல் 50 ரூபாவாகவும், சம்பா நெல் 52 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதை விட கூடுதல் விலைக்கு எவரேனும் நெல் கொள்வனவு செய்தாலும், ஒரு கிலோ அரிசி விலையை 100 ரூபாவை விட அதிகரித்து விற்பனை செய்ய அனுமதிக்கப்போவதில்லையெனவும் அமைச்சர் பந்துள குணவர்தன தெரிவித்தார்.

இதேவேளை கூடுதல் விலைக்கு அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களை கண்டறிவதற்கான சுற்றிவளைப்புக்கள் இன்றும் இடம்பெறவுள்ளன. பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை சுற்றிவளைப்புக்களை முன்னெடுக்கவுள்ளது. நேற்றைய தினம் புறக்கோட்டைப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது கூடுதல் விலைக்கு அரிசி விற்பனை செய்த 12 வர்த்தக நிலையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 4ம் குறுக்குத்தெரு மற்றும் டேம் வீதி பகுதிகளில் மொத்த விற்பனை நிலையங்கள் பல சோதனைக்குட்படுத்தப்பட்டன. இதன்போதே கூடுதல் விலைக்கு அரிசி விற்பை செய்த வர்த்தக நிலையங்களும், அரிசியை பதுக்கி வைத்திருந்த வர்த்தக நிலையங்களும் அடையாளம் காணப்பட்டதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 20, 2021 13:33

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar179.39183.06
USA
Pound232.18239.41
UK
Euro197.73204.49
EU
Yen1.621.67
Japan
Yuan25.726.91
China
Dollar121.84126.92
Australia
CountryCurrencyRate
Dinar480.97
Dinar597.39
Riyal470.97
Riyal49.80
Riyal48.33
Dirham181.33