fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலங்கை விமானப்படையின் 70வது ஆண்டு நிறைவை முன்னிட்டு சைக்கிள் ஓட்டப் போட்டி

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 19, 2021 18:11

இலங்கை விமானப்படையின் 70 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள விமான படை சைக்கிள் ஓட்ட போட்டி, 2021 அடுத்த மாதம் 07 திகதி நடைபெறவுள்ளது.

இராணுவம் மற்றும் இலங்கை சைக்கிள் ஓட்டுநர் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இப்போட்டி 22ஆம் முறையாக நடைபெறுகின்றது. இப்போட்டியில் 150க்கும் மேற்பட்ட முன்னணி போட்டியாளர்கள் பங்குபற்றவுள்ளனர்.

ஆண்கள் சைக்கிள் ஓட்ட போட்டி கொழும்பிலிருந்து கட்டுநாயக்க வரை நடைபெறுவதுடன், கொழும்பிலிருந்து வத்தளை வரையான சமாதான சைக்கிள் ஓட்ட போட்டியும், ஏக்கல முதல் கட்டுநாயக்க வரை மகளிர் சைக்கிள் ஓட்ட போட்டியும் நடைபெறவுள்ளது.

இப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கான பரிசு, நினைவு சின்னங்கள் வழங்கும் நிகழ்வு கட்டுநாயக்க ஈகிள்ஸ் லெகுன் மண்டபத்தில் விமானப்படை தளபதி எயா மார்சல் சுதர்ஷன பதிரனவின் தலைமையில் அன்றைய தினம் மாலை நடைபெறவுள்ளது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 19, 2021 18:11

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க