இணையத்தளங்களில் மோசடிக்காரர்கள் மேற்கொள்கின்ற குற்றச்செயல்களுக்கு ஏமாறா வேண்டாமென பொலிசார் வலியுறுத்து
Related Articles
பத்திரிகை ஒன்றில் பிரசுரிக்கப்பட்டிருந்த திருமண விளம்பரமொன்றிற்கு ஏற்ப வீட்டிற்கு வருகைதந்து யுவதியுடன் நெருங்கி பழகி அவருக்கு ஏதேனும் திரவம் கலந்த குளிர்பானத்தை பருகச் செய்து சுய நினைவை இழக்கச் செய்து அந்த யுவதியின் கடன் அட்டையின் மூலம் 2 இலட்சம் ரூபா பணத்தை பெற்றுக்கொண்ட சம்பவம் குறித்து நீர்கொழும்பு பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பத்திரிகைகள் மற்றும் இணையத்தளங்களில் பரிசுரிக்கப்படுகின்ற விளம்பரங்களை பயன்படுத்தி மோசடிக் காரர்கள் மேற்கொள்கின்ற பல்வேறு குற்றச்செயல்களுக்கு ஏமாறா வேண்டாமென பொலிசார் பொதுமக்களை கேட்டுள்ளனர்.