3 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதி கொண்ட ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிலியந்தலை பகுதியில் நேற்றிரவு சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். இது படோவிட்ட சங்க எனும் திட்டமிட்ட குற்றக்குழுவின் உறுப்பினர் டுபாயில் இருந்து வழிநடத்தும் போதைப் பொருள் வர்த்தகம் என தெரியவந்துள்ளது.
“நேற்று இரவு பிலியந்தலை மடபாத்த பட்டுஅந்தர பகுதியில் கொழும்பு திட்டமிட்ட குற்றச்செயல்களை தடுக்கும் பிரிவினர் ஹெரோயின் வகையைச் சேர்ந்த 3 கிலோ 200 கிராம் போதைப் பொருளுடன் நபர் ஒருவரை கைது செய்தனர். மோட்டார் சைக்கிள் ஒன்றில் குறித்த போதைப் பொருள் கொண்டுசெல்லப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டதோடு அவர் 47 வயதான அதே பகுதியை வசிப்பிடமாக கொண்டவர் எனவும் தெரியவந்துள்ளது. சந்தேகநபர் பயணித்த மோட்டார் சைக்கிளும் பொலிசாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகநபரை இன்று கெஸ்பேவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் நான்கு நாட்கள் தடுத்து வைக்கும் உத்தரவை பெற்று விசாரணைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்கள் தற்போது சிறைச்சாலையில் உள்ள போதைப் பொருளுடன் தொடர்புடைய நபர் ஒருவரின் வழிகாட்டலின் கீழ் கொண்டு செல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது. இதேவேளை நேற்ற்pரவு வெல்லம்பிட்டி பகுதியில் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் ஹெரோயினுக்கு சமனான 250 கிராம் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.”