திருகோணமலை, தம்பலகாமம் பிரதேச சபையில் இவ்வருடத்திற்காக சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டம் மேலதிக ஒன்பது வாக்குகளினால் நிறைவேறியுள்ளது.
பிரதேச சபையின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்ட சம்பிக்க பண்டார வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்தார். ஐந்து உறுப்பினர்கள் வாக்களிப்பில் இருந்து விலகி கொண்டனர். முன்னாள் தலைவர் தாலிப் அலி சமர்ப்பித்த வரவு செலவு திட்ட அறிக்கை இருமுறை தோற்கடிக்கப்பட்டமையினால் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதிதுவப்படுத்தும் சம்பிக்க பண்டார தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.