தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு விசேட கடன் சலுகைகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு அரச வங்கிகளினூடாக மூன்று இலட்சம் ரூபா கடனுதவியை பெற்றுக்கொடுக்கவும், பயணச்சீட்டுக்களை இயந்திரத்தை கொள்வனவு செய்வதற்கு 50 ஆயிரம் ரூபா கடனுதவியை பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த திட்டத்தின் அடையாள நிமித்தமாக 27 பஸ் உரிமையாளர்களுக்கு கடன் திட்டத்திற்கான ஆவணங்கள் அமைச்சர் காமினி லொக்குகேவினால் போக்குவரத்து அமைச்சில் வைத்து வழங்கி வைக்கப்பட்டுள்ளது. தனியார் பஸ் உரிமையாளர்கள், அரச வங்கிகளுக்கு சென்று, கடன் திட்டம் குறித்து கேட்டறிந்து, கடனை பெற்றுக்கொள்ள முடியுமென போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.