நான் காதல் திருமணம் செய்ய வில்லை என்று பிரபல நடிகை கயல் ஆனந்தி பத்திரிகையாளர் சந்திப்பில் பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது :
என் திருமணத்தை சென்னையில் ஒரு வரவேற்பு வைத்து அறிவிக்க திட்டமிட்டு இருந்தேன். ஆனால் அதற்குள் வெளியில் வந்துவிட்டது. இது முழுக்க முழுக்க பெற்றோர் நிச்சயித்த திருமணம். காதல் திருமணம் அல்ல. அவர் எங்கள் குடும்ப நண்பர். மரைன் இஞ்சினியர். மேலும் இணை இயக்குனரும் கூட. விரைவில் அவர் படம் இயக்குவார். எனக்கு நாயகியாக வாய்ப்பு தருவார் என காத்திருக்கிறேன். திருமணத்துக்கு முன்பே நான் தேர்ந்தெடுத்து தான் நடிப்பேன். இனியும் அப்படியே நடிப்பேன். கணவர் குடும்பத்தில் முழு சுதந்திரம் கொடுத்துள்ளார்கள்’. இவ்வாறு அவர் கூறினார்.