அமெரிக்கா மற்றும் இலங்கைக்கிடையிலான முன்னெடுக்கப்பட்டிருக்குமென சந்தெகிக்கப்படும் குஷ் ரக போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமார் 8 மில்லியன் ரூபா பெறுமதியான ஆயிரத்து 150 கிரேம் பெறுமதியான போதைப்பொருள் சீதுவை பகுதியிலுள்ள சுங்கப்பொருள் விடுவிப்பு பகுதியில் மீட்கப்பட்டுள்ளது. குளிர்பானம் தயாரிக்கும் இயந்திரத்தில் சூட்சுமமாக மறைத்துவைக்கப்பட்டிருந்தாக சுங்க பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய தெரிவித்துள்ளார். சுங்கப்பிரிவில் குறித்த போதைப்பொருள் வைக்கப்பட்டிருந்த நிலையில் அதனை பெறுவதற்கு எவரும் வருகைதரவில்லை. அதனையடுத்து ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் பொதி பரிசோதிக்கப்பட்டது. அதன்போது குஷ் ரக போதைப்பொருள் மீட்கப்பட்டதாக சுங்க பணிப்பாளர், தெரிவித்துள்ளார்.
குஷ் ரக போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் தகவல்
படிக்க 0 நிமிடங்கள்