பதுளை மாநகர சபையின் அதிகாரத்தை ஆணையாளரின் கீழ் கொண்டுவரும் வகையில் ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முசம்மிலினால் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நகர பிதா பிரியந்த அமரசிறிக்கு பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்காமையினால் இத்தீர்மானம் எட்டப்பட்டதாக ஆளுநர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக சபையின் நடவடிக்கைகள் செயலிழந்து காணப்பட்டதாகவும் ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார். 25 உறுப்பினர்களைக் கொண்ட பதுளை நகர சபையின் நிர்வாகம் பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் கீழ் காணப்படுகிறது.

பதுளை மாநகர சபையின் அதிகாரத்தை ஆணையாளரின் கீழ் கொண்டுவரும் வகையில் அதி விசேட வர்த்தமானி..
படிக்க 0 நிமிடங்கள்