இந்தியாவில் புதிதாக 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன் அடிப்படையில் நாள் ஒன்றுக்கு அந்நாட்டில் 12 ஆயிரத்துக்கும் குறைந்த தொகை கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தியாவில் 66 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதனால் கொவிட் பரவுவது துரிதமாக குறைவடைந்து வருகின்றது. கொவிட் தடுப்பூசி ஏற்றும் முதல் சுற்று நிறைவடைந்துள்ளதுடன், இரண்டாம் சுற்று தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் கொரோனா தொற்றாளர்கள் குறைவடையும் விகிதம் 97 சதவீதத்தை தாண்டியுள்ளதாகவும் அறிவிக்கப்படுகின்றது.