மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெல்லாவெளி கலை மகள் வித்தியாலத்தில் ஆயுதங்கள் இருப்பதாக கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
வெல்லாவெளி கலைமகள் வித்தியாலய வளாகத்தில் ஆயுதங்கள் இருப்பதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசேட அதிரடிப்படையினரும் பொலிசாரும் இணைந்து தேடுதல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றத்தின் அனுமதியுடன் கனரக ஜே.சி.பி வாகனங்கள் கொண்டு பாடசாலை வளாகத்தில் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. எனினும் எந்தவிதமான ஆயுதங்களும் மீட்கப்படாத நிலையில் தேடுதல் பணிகள் இடைநிறுத்தப்பட்டன.