Country | Buying | Selling | |
![]() | Dollar | 179.39 | 183.06 |
USA | |||
![]() | Pound | 232.18 | 239.41 |
UK | |||
![]() | Euro | 197.73 | 204.49 |
EU | |||
![]() | Yen | 1.62 | 1.67 |
Japan | |||
![]() | Yuan | 25.72 | 6.91 |
China | |||
![]() | Dollar | 121.84 | 126.92 |
Australia |
3 மாதங்களுக்காக இன்று முதல் 27 பொருட்களின் விலைகள் குறைப்பு..
Related Articles
அரிசி, கோதுமை மா, சீனி, பால்மா உள்ளிட்ட 27 வகையான பொருட்களின் விலை இன்று முதல் குறைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 3 மாதங்களுக்கு இந்த விலைக்குறைப்பு அமுலில் இருக்குமென வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். புதிய விலைகளின் கீழ் குறித்த 27 வகையான பொருட்களையும் சதோச மற்றும் கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்களில் பெற்றுக்கொள்ள முடியும். சிவப்பு அரிசி மற்றும் வெள்ளைப் பச்சை அரிசி ஒரு கிலோ 93 ரூபாவுக்கும் நாட்டு அரிசி ஒரு கிலோ 96 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சம்பா அரிசி ஒரு கிலோ 99 ரூபாவுக்கும் , கீரி சம்பா ஒரு கிலோ 125 ரூபாவுக்கும் விற்கப்படுகிறது. கோதுமை மா ஒரு கிலோ 84 ரூபாவுக்கும், வெள்ளை சீனி ஒரு கிலோ 99 ரூபாவுக்கும், சிவப்பு சீனி ஒரு கிலோ 125 ரூபாவுக்கும் விற்கப்படுகிறது.
400 கிராம் பால்மா பக்கெட் 355 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. தேயிலை, பருப்பு, பெரிய வெங்காயம், உருளைக் கிழங்கு, கடலை, காய்ந்த மிளகாய், டின்மீன், நெத்தலி, கோழி இறைச்சி, உப்பு, சோயா எண்ணெய், சவர்க்காரம், வாசனை சவர்க்காரம் ஆகியவற்றின் விலைகளும் குறைக்கப்பட்டுள்ளன.