fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மளிகைப்பொருட்களின் இறக்குமதி தடைசெய்யப்பட்டதன் மூலம் பல்வேறு இலாபங்கள்..

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 6, 2021 15:09

மளிகைப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதை தடை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. இதன் மூலம் பல பிரதிபலன்கள் கிடைத்துள்ளதாக விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

“மளிகைப் பொருட்களை சார்ந்த துறைகள் குறித்து நோக்கும் போது கொவிட் 19 அச்சுறுத்தலுக்கும் மத்தியிலும் கூட ஏனைய துறைகளில் பின்னடைவுகள் ஏற்பட்ட போதிலும் இத்துறையில் பாரிய பயன்களை பெற்றுள்ளோம். 2019 ஆம் ஆண்டு வருமானத்தை நோக்கினால் ஏற்றுமதி வருமானமாக 63 பில்ல்pயன் ரூபா பெறப்பட்டது. 2020 ஆம் ஆண்டில் சுமார் 73 பில்லியன் ரூபா வருமானத்தைப் பெற்றோம். மிளகு, கறுவா, மஞ்சள், இஞ்சி போன்றவற்றிற்கான இறக்குமதி தடை செய்யப்பட்டதன் மூலம் சுமார் 2 பில்லியன் ரூபாவை சேமிக்க முடிந்தது. இவற்றை நோக்கினால் 11 பில்லியன் ரூபா அந்நிய செலாவணியை இத்துறையின் மூலம் பெற்றுக் கொள்ள் முடிந்தது. 2020 ஆம் ஆண்டு அமுல்படுத்தப்பட்ட வேலைத்திட்டங்களே இதற்கு காரணமாகும். இலவசமாக செடிகளை வழங்கியமை தரமான பசளைகளை வழங்குதல் போன்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.”

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 6, 2021 15:09

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar198.50202.99
USA
Pound273.27282.08
UK
Euro233.75242.34
EU
Yen1.791.86
Japan
Yuan30.2331.50
China
Dollar144.54150.86
Australia
CountryCurrencyRate
Dinar530.50
Dinar665.11
Riyal519.49
Riyal54.37
Riyal53.31
Dirham54.44