fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அபுதாபி T-10 கிரிக்கட் தொடரின் இறுதிப்போட்டி இன்று

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 6, 2021 14:15

அபுதாபி T-10 கிரிக்கட் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெறவுள்ளது. டெல்லி புல்ஸ் அணியும், நோர்தன் வொரியஸ் அணியும் போட்டியில் மோதவுள்ளன. இரவு 9.30 க்கு போட்டி ஆரம்பமாகவுள்ளது. சுப்பர்லீக் சுற்றில் முதலிடத்தை டெல்லி புல்ஸ் அணியும், 2ம் இடத்தை நோர்தன் வொரியஸ் அணியும் பெற்றிருந்தன. புள்ளிப்பட்டியலுக்கமையவே முதல் இரு இடங்களிலிருக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளன. இதேவேளை 3ம் இடத்தை தெரிவுசெய்வதற்கான போட்டியும் இன்று நடைபெறவுள்ளது. புள்ளிப்பட்டியலில் அடுத்த இரு இடங்களிலுள்ள கொலான்டர்ஸ் அணியும், டீம் அபுதாபி ஆகிய அணிகள் மோதவுள்ளன. மாலை 6.45க்கு 3ம் இடத்திற்கான போட்டி நடைபெறவுள்ளது. இதேவேளை இரு போட்டிகளும் வசந்தம் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 6, 2021 14:15

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க