fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் மத்திய வங்கி மோசடி தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்கப்படுமென சுதந்திர தின உரையில் ஜனாதிபதி தெரிவிப்பு…

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 4, 2021 13:50

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் மத்திய வங்கி மோசடி தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்கப்படுமென சுதந்திர தின உரையில் ஜனாதிபதி தெரிவிப்பு…

பொய் பிரச்சாரங்களின் ஊடாக மக்களை தவராக வழிநடத்துவதன் மூலம் நாட்டின் இறையான்மையை பாதுகாக்கும் தலைமைக்கு எதிராக இனவெறி சக்திகளை தூண்டும் நடைமுறை கடந்த காலத்தை போன்று தற்போதும் காணப்படுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். மக்கள் இது தொடர்பில் விழிப்புடன் செயற்பட வேண்டுமென 73 வது தேசிய சுதந்திர தின நிகழ்வில் உரையாற்றிய போது ஜனாதிபதி குறிப்பிட்டார். சுபீட்சமான எதிர்காலம், செபாக்கியமான நாடு எனும் தொனிப்பொருளில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நிகழ்வுகள் இடம்பெற்றன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரமேதாச, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

ஜனாதிபதியால் தேசிய கொடி ஏற்றப்பட்டதையடுத்து, தேசிய கீதம் இசைக்கப்பட்டது. தொடர்ச்சியாக ஜய மங்கள கீதம் இசைக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்த இராணுவ வீரர்களுக்கென 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன் பின்னர் 21 துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு, முப்படையினரால் மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பல்வேறு விடயங்களை தெளிவுப்படுத்தினார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் மத்திய வங்கி மோசடி தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்கப்படும். சட்டத்திலிருந்து எவரும் தப்பிக்க முடியாது. அத்துடன் தீவிரவாத செயற்பாடுகள் தலைதூக்க எந்தவொரு சந்தர்ப்பங்களிலும் இடமளிக்கப்படமாட்டாதென ஜனாதிபதி குறிப்பிட்டார். இதேவேளை குறுகிய நோக்கங்களுக்காக தனக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களை மகிழ்ச்சிப்படுத்த நாட்;டுக்கு சாதகமற்ற முடிவுகளை ஒருபோதும் எடுக்கப்போவதில்லையென ஜனாதிபதி தெரிவித்தார். ஜனாதிபதியின் தேசிய உரையின் பின்னர் சுதந்திர தின நிகழ்வு இடம்பெற்றது. கொரோனா தொற்றுக்கு மத்தியில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி, இம்முறை சுதந்திர தின நிகழ்வுகள் எளிமையாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

நிகழ்வில் இலங்கையின் அபிமானத்தை பாதுகாக்கும் வகையில் முப்படையினர் பொலிஸார், பொலிஸ் விசேட படைப்பிரிவு மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்கத்தின் அணிவகுப்புக்களும் இணைக்கப்பட்டிருந்தன. கலாசார நிகழ்வுகளும், இதன் போது இடம்பெற்றன. பாரம்பரிய தேசிய தின கலாசாரத்தை அடிப்படையாக கொண்டு காலி முகத்திடலில் 21 துப்பாக்கி வேட்டுக்களம் தீர்க்கப்பட்டன.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 4, 2021 13:50

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க