சுதந்திர தினநிகழ்வுகளை முன்னிட்டு சர்வமத வழிபாடுகள் இடம்பெற்றன. இந்து மத வழிபாடுகள் பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் ஆலயத்தில் இடம்பெற்றது. நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.
பௌத்த மத வழிபாடுகள் நாரஹேன்பிட்ட அபயாராம விகாரையில் இடம்பெற்றது. பேராசிரியர் வணக்கத்துக்குரிய மெதகொட அபயதிஸ்ஸ தேரரின் தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றன.
வெள்ளவத்தை மெதடிஸ் தேவாலயத்தில் விசேட தேவ ஆராதணைகள் இடம்பெற்றன. ஸ்ரீ லங்கா தேசிய கிறிஸ்தவ சபையினால் நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
பம்பலப்பிட்ட மஜ்மாவுல் கைரான் ஜூம்ஆ பள்ளியில் இஸ்லாமிய மத நிகழ்வுகள் இடம்பெறன்ன. நீதயமைச்சர் அலிசப்ரி உள்ளிட்டபொது மக்கள் பிரதிநிதிகள் நிகழ்வில் கலந்துக்கொண்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.