இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தாரேக் அரிபுல் இஸ்லாம் விஜயராமயிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவை சந்தித்தார்.
73 வது சுதந்திர தினத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்த பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் அந்நாட்டு பிரதமரின் வாழ்த்து செய்தியையும் பிரதமரிடம் கையளித்தார். விவசாயம், மீன்பிடி, மற்றும் கடற்றொழில் தொடர்பிலான துறைகளில் ஒத்துழைப்புக்களை மேம்படுத்துவதன் ஊடாக இருதரப்பு தொடர்புகளை விஸ்தரிப்பதற்கான வாய்ப்புகள் தொடர்பில் உயர்ஸ்தானிகர் இங்கு தெளிவுப்படுத்தினார். பங்களாதேஷ் தற்போது அலங்கார மீன் உற்பத்தி துறையில் உலகில் 4 வது இடத்தை தக்கவைத்துள்ளதாக உயர்ஸ்தானிகர்சுட்டிக்காட்டினார்.
இலங்கையுடன் தமது அனுபவங்களை பகிர்ந்து கொள்ள எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். வெள்ளம் மற்றும் வறட்சி கால நிலைகளுக்கு தாக்கு பிடிக்க கூடியவகையிலான அரிசி வகைகளை உற்பத்தி செய்வதற்கு பங்களாதேஷ் இலங்கைக்கு ஒத்துழைப்பை வழங்கி வருகின்றது. கல்வி மற்றும் ஒளடத துறைகளிலும் பல வருடங்களாக பங்களாதேஷ் இலங்கைக்கு வழங்கி வரும் ஒத்துழைப்புகள் குறித்தும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தனது நன்றியைதெரிவித்தார். இலங்கையின் ஒளடத உற்பத்pத துறையில் பங்களாதேசின் முதலீட்டை அதிகரிக்குமாறும் பிரதமர் இங்கு கோரிக்கை விடுத்தார். பங்களாதேஷ் இம்முறை தமது சுதந்திர தின பொன்விழாவை கொண்டாடவுள்ளதால் இதில் கலந்து கொள்ளுமாறு உயர்ஸ்தானிகர் பிரதமருக்கு அழைத்து விடுத்தார். இச்சந்தர்ப்பத்தில் பிரதமரின் செயலாளர் காமினி செனரத்தும் இணைந்திருந்தார்.