வெளிநாட்டிலிருந்து தொழில் இழந்த நிலையில் நாட்டிற்கு வருகை தரும் பணியாளர்களுக்கு கொடுப்பனவு மற்றும் வட்டியின்றி கடன் வழங்கவுள்ள்தாக அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார். ஒரு இலட்சம் ரூபா கொடுப்பனவாக வழங்கப்படவுள்ள்தாக கொழும்பில் இடம்பெற் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.
“தொழிலை இழந்து வருகை தரும் வெளிநாட்டு பணியாளர்களுக்கென தற்போது எமது பணியகம் 50 ஆயிரம் ரூபாவை வழங்கி வருகின்றது. நான் இந்த 50 ஆயிரம் ரூபாவை ஒரு இலட்சம் ரூபா வரை அதிகரிக்குமாறு கூறினேன். அதனை போல் 50 ஆயிரம் ரூபாவை வட்டியின்றி கடனாக வழங்குமாறும் கோரியுள்ளேன். இதற்கென தற்போது 30.4 மில் லியன் ரூபா பணியகத்தினால் ஒதுக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு வருகை தரும் பணியாளர்களின் நலன்புரிக்காக இவை பயன்படுத்தப்படவுள்ளன.”