fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அபுதாபி T10 தொடரில் இன்று 3 போட்டிகள்..

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 29, 2021 13:57

அபு தாபி டி 10 தொடரில் 3 போட்டிகள் இன்று இடம்பெறவுள்ளன. முதலாவது போட்டி பூனே டெவில்ஸ் மற்றும் குவாலன்டர்ஸ் அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ளது. இலங்கை நேரப்படி மாலை 5.30க்கு முதலாவது போட்டி ஆரம்பமாகும்.

தொடரின் 5வது போட்டியில் மராத்தா அரேபியன்ஸ் மற்றும் டெல்லி புல்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன. இரவு 7.45க்கு இரண்டாவது போட்டி ஆரம்பமாகும். அடுத்த போட்டி டெக்கன் கிளேடியேட்டர்ஸ் மற்றும் டீம் அபு தாபி அணிகளுக்கிடையில் இரவு 10 மணியளவில் இடம்பெறவுள்ளது.

அபு தாபி டி 10 தொடர் நேற்றைய தினம் ஆரம்பமான நிலையில் , நேற்றைய தினம் 3 போட்டிகள் இடம்பெற்றன. குழு ஏ யில் விளையாடிய பூனே டெவி;ல்ஸ் , மராத்தா அரேபியன்ஸ் மற்றும் குழு பீ யில் விளையாடிய டெல்லி புல்ஸ் அணிகள் வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 29, 2021 13:57

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க