இந்திய தலைநகர் டெல்லியில் நிலவும் பதற்ற நிலையை கட்டுப்படுத்தும் வகையில் நேற்று நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் மத்திய அரசுக்கு நெருக்கடி அளிக்கும் விதமாக டெல்லியில் விவசாயிகள் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் விசேட கலந்துரையாடல்கள் இடம்பெற்று, போராட்டங்களை கட்டுப்படுத்துவதற்கு இராணுவப் படையினரை பாதுகாப்பில் ஈடுபடுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறித்த அறிவுறுத்தலுக்கமைய 144 தடை உத்தரவு அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.