பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பதற்கு கம்பனிகள் இணக்கம் தெரிவிக்காவிடின் ஒரு வாரத்திற்கு சம்பள நிர்ணய சபையை அழைத்து குறித்த நாளாந்த சம்பளத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.
கிராமவாசனா கல்வி புலமை பரிசில் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டார். தொழில் தலத்தில் பணியில் இருக்கும்போது உபாதைக்குள்ளானாலோ அல்லது உயிரிழந்தாலோ அவர்களின் பிள்ளைகளுக்கென குறித்த கல்வி புலமை பரிசில் வேலைத்திட்டம் முன்னெடுகக்ப்படுகின்றது. 2000 ஆம் ஆண்டு முதல் குறித்த வேலைத்தி;ட்டத்தின் ஊடாக 2 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு புலமை பரிசில் வழங்கப்பட்டுள்ளது.