பாகிஸ்தானில் அமுல்படுத்தப்பட்ட புதிய இணையத்தள விதிமுறைகள் குறித்து மீளாய்வு செய்யப்படவுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. பேச்சு சுகந்திரத்தை மட்டுப்படுத்தும் நோக்கிலும், இணையத்தள கண்காணிப்பை அதிகரிக்கும் நோக்கிலும் குறித்த புதிய நடைமுறை கடந்த நவம்பர் மாதம் முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. அது குறித்த பல்வேறு விமர்சனங்களும் சர்ச்சைகளும் நீடிக்கும் நிலையில் அதனை மீளாய்வு செய்வதற்கு தற்போது அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
சிவில் அமைப்புக்கள் சில அது தொடர்பில் எதிர்ப்பு தெரிவித்து குறித்த சட்ட நடைமுறையை நீக்குமாறும், தேவையற்ற நடைமுறைகளை இல்லாமல் செய்யுமாறும் வலியுருத்தி வழக்கு தாக்கல் செய்துள்ளனர். பாகிஸ்தானின் இலத்திரணியல் குற்றச்சட்டத்தின் கீழ் அரசாங்கத்தின் அதிகாரங்களை விரிவாக்கும் செயற்பாடு கடந்த 2016ஆண்டு நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.