fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலங்கை கிரிக்கட் அணியின் புதிய முகாமையாளராக ஜெரோம் ஜெயரத்ன நியமனம்..

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 26, 2021 12:52

அடுத்த மாதம் மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிராக இடம்பெறவுள்ள கிரிக்கட் தொடருக்கான இலங்கை அணி பெயரிடப்பட்டுள்ளது. குறித்த அணியில் 35 வீரர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இலங்கை மற்றும் மேற்கிற்திய தீவுகள் அணிகளுக்கிடையில் இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டுவண்டி டுவண்டி போட்டிகள் இடம்பெறவுள்ளன. இலங்கை அணியில் திமுத் கருணாரத்ன, குசல் பெரேரா, ஓஷத பெர்னாண்டோ மற்றும் லஹிரு திரிமானே ஆகியோரும் பெயரிடப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இலங்கை கிரிக்கட் அணியின் புதிய முகாமையாளராக ஜெரோம் ஜெயரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த மாதம் இலங்கை அணியின் மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தில் அணியின் முகாமையாளராக ஜெரோம் ஜெயரத்ன செயற்படவுள்ளார். இங்கிலாந்து அணிக்கெதிரான நடைப்பெற்று முடிந்த டெஸ்ட் போட்டிகளையடுத்து தனிப்பட்ட காரணங்களுக்காக அசந்த டி மெல் அணியின் முகாமையாளர் பதவியிலிருந்து விலகினார். குறித்த வெற்றிடத்திற்கே ஜெரோம் ஜெயரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இலங்கை கிரிக்கட்டின் தலைமை இயக்க அதிகாரியாகவும் பணியாற்றவுள்ளதாக இலங்கை கிரிக்கட் நிர்வாகம் அறிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 26, 2021 12:52

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க