பதுளை கொஸ்லந்தை பகுதியில் சட்டவிரோத புதையல் அகழ்வில் ஈடுப்பட்ட 14 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கொஸ்லந்தை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது புதையல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட உபகரண்ஙகள் சில கைப்பற்றப்பட்டுள்ளன. கைதுசெய்யப்பட்டவர்கள் ஊவா மாவலகம ஒக்பீல்ட் பகுதியை சேர்ந்தவர்களென தெரியவந்துள்ளது. அவர்கள் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்லந்த பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.