மறைந்த சிரேஷ்ட ஊடகவியலாளரும், ஊடக பிரபலமுமான கலாகீர்த்தி எட்வின் ஆரியதாஸவின் இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெறவுள்ளன. பொரள்ளை ஜயரத்ன மலர்சாலையில் வைக்கப்பட்டுள்ள அவரது பூதவுடல் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய அரச மரியாதையுடன் இறுதிக் கிரியைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. சுகாதார வழிமுறைகளை பின்பற்றி அவரது தேகத்திற்கு பல்வேறு தரப்பினரும் இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர். நடமாடும் நூலகம் என அழைக்கப்பட்ட அவர், தனது 98ஆவது வயதில் கடந்த வெள்ளிக்கிழமை இயற்கை எய்தினார். 1922ஆம் ஆண்டு டிசம்பர் 03ம் திகதி, காலி, உணவட்டுனவில் பிறந்த அவர், மஹிந்த கல்லூரியில் தனது ஆரம்ப கல்வியைக் கற்றதோடு, சிலோன் பல்கலைக்கழகத்தில் சிங்களம் மற்றும் ஆங்கில மொழி பட்டத்தை பெற்றார். இயற்கை ஆர்வலரான அவர், ஆசிரியர் தொழிலில் தனது பயணத்தை ஆரம்பித்து, பின்னர் ஊடகத் துறைக்குள் நுழைந்தார். எட்வின் ஆரியதாஸ, இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில், வெகுஜன தொடர்பாடல் மற்றும் ஊடக கற்கை நெறிகளை நிறுவுவதில் பெரும் பங்காற்றியிருந்தார். பல்வேறு பத்திரிகைகள், ஊடக நிறுவனங்களில் இறுதி வரை தனது பங்களிப்பு மற்றும் ஆற்றல்களை வெளிப்படுத்தி வந்த அவர், பல்வேறு ஆங்கில மற்றும் சிங்கள புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார்.

மறைந்த சிரேஷ்ட ஊடகவியலாளரும், ஊடக பிரபலமுமான கலாகீர்த்தி எட்வின் ஆரியதாஸவின் இறுதிக் கிரியைகள் இன்று
படிக்க 1 நிமிடங்கள்