fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கிழக்கில் பெரும்போக நெல் அறுவடை ஆரம்பம்

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 22, 2021 18:11

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்போக நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் நெல் கொள்வனவை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வெள்ள அனர்த்தம் மற்றும் அரக்கொத்தி தாக்கம் என்பவற்றை கடந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டது. இம்முறை ஒரு இலட்சத்து 74 ஆயிரம் ஏக்கரில் நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி பணிப்பாளர் தெரிவித்தார். இம்முறை பெரும் போக நெற்செய்கை காலத்தில் அரசாங்கம் ஒரு இலட்சத்து 40 ஆயிரம் ஏக்கர் காணிகளுக்கு இலவச உரம் வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.

000

திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் கும்புறுப்பிட்டி கிராம சேவகர் பிரிவில் பயிரிடப்பட்ட உளுந்து உற்பத்தி இன்று அறுவடை செய்யப்பட்டது. மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டி கோரள்ள நேரில் சென்று இதனை பார்வையிட்டதோடு அப்பகுதி விவசாயிகளால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளையும் கேட்டறிந்தார். உரிய வடிகான் இன்மையால் பயிர்ச்செய்கை பாதிக்கப்படுவதாக மக்கள் சுட்டிக்காட்டிய நிலையில் 10 இலட்சம் ரூபா இதற்கென ஒதுக்குவதாகவும் பாரம்பரியமாக செய்து வந்த பயிர்ச்செய்கை நிலங்களில் பயிர்செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அரசாங்க அதிபர் இதன்போது மக்களுக்கு உறுதி மொழி வழங்கினார்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 22, 2021 18:11

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar179.39183.06
USA
Pound232.18239.41
UK
Euro197.73204.49
EU
Yen1.621.67
Japan
Yuan25.726.91
China
Dollar121.84126.92
Australia
CountryCurrencyRate
Dinar480.97
Dinar597.39
Riyal470.97
Riyal49.80
Riyal48.33
Dirham181.33