கடந்த அரசாங்கத்தின் போது விவசாய அமைச்சிற்கு அதிகூடிய வாடகையில் கட்டிடமொன்றை பெற்றுக்கொண்டமை குறித்து முறையான விசாரணை நடத்தப்படவேண்டுமென அரச கணக்காய்வு குழுவான கோப்பாவில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
விவசாய அமைச்சிற்கு தனியார் கட்டிடமொன்றை வாடகைக்கு பெற்றுக்கொள்வதற்கு விசேட கணக்காய்வு அறிக்கை கோப்பா குழுவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண அமைச்சரவை தீர்மானம் தொடர்பாக தமது கருத்தை தெரிவிப்பதற்கு அரச அதிகாரிகளுக்கான சந்தர்ப்பம் குறித்து கொள்கை அளவிலான தீர்மானம் எடுக்கப்படவேண்டுமென பரிந்துரைத்தார். கேள்வி மனு கோட்பாட்டிற்கு முரணாக நேர்மை அற்ற முறையில் அரச மதிப்பீட்டாளரின்
மதிப்பீட்டுக்கு அப்பால் அரச நிதியத்திலிருந்து 1524 மில்லியன் ரூபாவை செலவிட்டு விவசாய அமைச்சு கட்டிடத்தை வாடகைக்கு பெற்றுக்கொண்டமை தொடர்பாக முறையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென அங்கு தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக அமைச்சு மட்டத்தில் முறையான விசாரணைகள் நடத்தப்படுவதாக விவசாய அமைச்சின் செயலாளர் சுமேத பெரேரா தெரிவித்தார். இக்கட்டித்தை பெற்றுக்கொள்வதற்கு கடந்த அரசாங்கத்த்pன் போது அமைச்சரவை தீர்மானத்திற்கு ஏற்பவே இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் ஏற்படாத வகையில் முறையான சட்டங்கள் வகுக்கப்படவேண்டுமென்றும் அங்கு தெரிவிக்கப்பட்டது.