சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்டவர்கள் அக்கரைப்பற்று பொலிசாரால் கைதுசெய்யப்பட்டனர். அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவின் கூழாவாடியில் சட்டவிரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்ட ஐந்து இயந்திரங்களையும் அக்கரைப்பற்று பொலிசார் கைப்பற்றினர். கடந்த சில வாரங்களாக குறித்த பிரதேசத்தில் சட்டவிரோதமாக மணல் அகழப்படுவதாக பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்தே சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டது. அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.எம்.எஸ்.பி விஜேயதுங்கவின் வழிகாட்டலுக்கமைய உதவிப் பொலிஸ் பரிசோதகர் ஏ.பி.எம். ஷரீப் தலைமையிலான குழுவினர் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.

சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்டவர்கள் அக்கரைப்பற்று பொலிசாரால் கைது
படிக்க 0 நிமிடங்கள்